சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்
சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ADMK MLA MEET
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு நடக்கவுள்ளதால் இந்த கூட்டத்தொடருக்கு அனைவரிடத்திலும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுகவுக்கு இந்த கூட்டத்தொடர் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.