சென்னை:அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாகிவருகிறது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்த ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜூலை 11ஆம் தேதிக்கு பொதுக்குழு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஓபிஎஸ் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதில் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்த தீர்மானம் இடம்பெற்றுள்ளது. இந்த பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 15 நாள்களுக்கு முன்பே அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:பொதுக் குழுவுக்கு தடை: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை