அதிமுக மாவட்ட, ஒன்றியச் செயலாளர்களுக்கான கூட்டம் இன்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தி, காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
அதிமுக ஆலோசனைக் கூட்டம் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் பங்கேற்பு! - அதிமுக
சென்னை: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், கட்சியைப் பலப்படுத்துதல், உறுப்பினர் சேர்த்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி: அடிக்கல் நாட்டும் தேதி அறிவிப்பு!