தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று (பிப். 26) அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக, காங்கிரஸ் கட்சியுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக - பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (பிப்.27) காலை நடைபெற்றது. இதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷண்ரெட்டி, சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பாஜகவினர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசுகின்றனர்.
இதையும் படிங்க...கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த திமுக!