தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 30, 2021, 7:33 AM IST

ETV Bharat / city

ரூ.3.83,76.571 கோடி நிதி ஒதுக்கீடு செய்த ஆதிதிராவிடர் நலத்துறை!

ரூ.3.83,76.571 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை
தமிழ்நாடு

சென்னை:ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 6 மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.3.83,76.571 கோடி மதிப்பில் 3950 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, நிர்வாக அனுமதித்தும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான, திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில், இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணாக்கரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், அரியலூர், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 13 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ரூ. 4.00 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படாமலும் மற்றும் கட்டப்பட்டு பகுதி நிலையிலும் உள்ளதால், மாணாக்கர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், பள்ளியில் நில ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையிலும் 7 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 6 மேல்நிலைப்பள்ளிகளில் ரூ .3.83,76.571 கோடி மதிப்பில் 3950 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, நிர்வாக அனுமதித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details