தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு ஊழியர்கள் பணிக்கு வர கூடுதல் பேருந்துகள்

சென்னை: அரசுப் பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

bus
bus

By

Published : May 21, 2020, 1:53 PM IST

Updated : May 21, 2020, 2:47 PM IST

நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பணியாளர்கள், 50 சதவீத அரசு பணியாளர்கள் பணிக்கு சென்று திரும்ப சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், ஏற்கனவே 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தலைமைச் செயலகத்திற்கு கூடுதலாக 25 பேருந்துகளும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பள்ளி கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக பணியாளர்களுக்காக மொத்தமாக 30 பேருந்துகளும் நேற்று முதல் கூடுதலாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக 49 பேருந்துகள் கேட்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், சென்னை புறநகர் பகுதியில் மாநகர போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்கள், பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை பொது மேலாளர் (94550 30 504) மற்றும் துணை மேலாளர் (94450 30523)ஆகியோரை கைபேசி மூலமாகவும், ’edp.mtc@tn.gov.in’ என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்த எம்.எல்.ஏ கருணாஸ்!

Last Updated : May 21, 2020, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details