விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகைகள் நயந்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து தியேட்டர்களில் வெளியான திரைப்படம்தான் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. கடந்த 28 ம் தேதி திரைக்கு வந்த ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலிப்பதை மையமாக கொண்டு உருவானது.
ரசிகர் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா-மீட்டுச் சென்ற விக்னேஷ் சிவன் - sammu
திரையரங்கிற்கு சென்ற நடிகை நயன்தாரா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் BMW காரில் ஒன்றாக தேவி திரையரங்கிற்கு வருகை தந்தார். மேலும்,உடன் நடிகர் விஜய் சேதுபதியும் வருகை தந்தார். இதை அறிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு வாசலில் குவிந்தனர். அவ்ர்கள் நயன்தாராவின் காருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
பின் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் நயன்தாராவை அருகில் சென்று பார்க்கவும் அவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வமாக திரையரங்கு வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், தேவி தியேட்டரே செய்வதறியாமல் திணறிப் போனது.