நடிகர் சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படம் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.
இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, உண்மையை வெளிக்கொணர அயராது உழைக்கும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவி வழங்கிய சூர்யா இப்படம் நாளை (நவ.02) வெளியாக உள்ள நிலையில், பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்கு 2D நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா முதலமைச்சர் ஸ்டாலிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது சூர்யாவுடன் ஜோதிகாவும் உடன் இருந்தார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? - உண்மையை உடைத்த சூர்யா