சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, பார்த்தவுடன் கும்பிடுவது போல் இருப்பவர்களும், பார்த்தவுடன் கூப்பிடுவது போல் இருப்பவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள், ஏனெனில் ரசிகர்கள் அனைத்தையும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர் என நடிகை நயன்தாராவின் பெயரை குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம்! - நயன்தாரா.
சென்னை: நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்த நடிகர் ராதாரவி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராதாரவி
இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் நேற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அவரை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
Last Updated : Mar 25, 2019, 11:44 AM IST