தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - ராதாரவி பேச்சு! - திருமாவளவன்

சென்னை: பிச்சைப் போடுவதாகக் கூறும் திமுகவுடன் இனியும் இருக்காமல் உண்மையான இந்தியனாக இருந்தால் பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் என திருமாவளவனுக்கு நடிகர் ராதாரவி அழைப்பு விடுத்துள்ளார்.

thirumavalavan
thirumavalavan

By

Published : Feb 28, 2020, 7:19 PM IST

குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் விருந்தினர் மாளிகை முதல் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பேரணியில் பேசிய நடிகர் ராதாரவி, ” இந்திய நாட்டைக் காப்பாற்ற நாம் இங்கு நிற்க வேண்டியுள்ளதை நினைத்தால் கவலையாக உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எல்லா மதத்தினரும் கலந்துகொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏன் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அச்சட்டத்தினால் இங்குள்ளவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை.

குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் கோட்டை நோக்கி பேரணி

பிச்சைப் போடுவதாகக் கூறும் திமுகவுடன் இனியும் திருமாவளவன் இருக்கலாமா. உண்மையிலேயே இந்திய நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்று இருக்குமானால் திருமாவளவன் இங்கு வரவேண்டும். இல்லை பிச்சைதான் வேண்டுமென்றால் அங்கேயே இருக்கட்டும்.

மோடி இந்தியாவின் பிரதமராக வந்த பிறகுதான் உண்மையான இந்திய வரைபடம் வந்துள்ளது. பிரதமர் மோடி 200 கலைஞர், 300 எம்.ஜி.ஆருக்கு சமமானவர். தமிழ்நாடு காக்கப்பட வேண்டும் என்றால் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இன்னும் 25 ஆண்டுகளுக்கு பாஜகதான் டெல்லியை ஆளும் ” என்றார்.

திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - ராதாரவி பேச்சு!

இதையும் படிங்க: டெல்லி வன்முறை மோடியின் ஒத்திகைதான் -திருமா!

ABOUT THE AUTHOR

...view details