தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு - நடிகர் பார்த்திபன் - Kamal haasan

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன்

By

Published : Apr 1, 2019, 8:18 PM IST

Updated : Apr 1, 2019, 8:34 PM IST


சென்னை வடபழனி பிரசாத் அரங்கில் குப்பத்து ராஜா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன்கூறியதாவது,

"எல்லோரும் கூட்டணி அமைத்து மக்களை குழப்பும்போது, கமல்ஹாசன் தனித்து நிற்கிறார். அவர் தனித்து நிற்பதில் எந்த லாபமும் இருப்பதாக தெரியவில்லை. அதனை மக்கள் யோசிக்க வேண்டும். என்னுடைய தொகுதியில் நிற்கும் வேட்பாளரை நல்லவரா என்று பார்த்து யோசித்த பின்பே வாக்களிப்பேன். அதே நேரம், பிற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆராய்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன்

கடந்த தேர்தலில் நோட்டா குறித்து நானே ஒரு பிரஸ்மீட் வைத்து நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறினேன். அப்போது நோட்டாவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய தேர்தல்களைகாட்டிலும் பதிவான விழக்காட்டைவிட அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் மக்களுக்குள் இருந்த வெறுப்புதான்.அனைவரும் ஏமாற்றுகிறார்கள். நாம் பணம் வாங்காமல் இருந்தால் இந்த நாடு என்ன ஒழுங்காகவா இருக்கப்போகிறது என்ற விரக்தி மக்களிடம் இருந்து வருகிறது.

எனவே மக்களிடம் உள்ள அந்த விரக்தியை போக்கவேண்டும். மக்கள் பணத்தை தவிர்த்துவிட்டு தங்களது வாக்கை மிகவும் சென்டிமென்டாக பார்த்து வாக்களிக்க வேண்டும்.மோடி பலம் வாய்ந்தவர் என ரஜினி சொன்னது ஒரு சூப்பர் கருத்து"என அவர் தெரிவித்தார்.

Last Updated : Apr 1, 2019, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details