தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த துணை நடிகர் கைது - சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த துணை நடிகர் கைது

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை நடிகரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சினிமா துணை நடிகர் கைது
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சினிமா துணை நடிகர் கைது

By

Published : Aug 16, 2022, 12:41 PM IST

சென்னையை சேர்ந்த சினிமா உதவி இயக்குநரின் 6 வயது மகள் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆக.14ஆம் தேதி சிறுமி, தனது வீட்டில் அருகில் வசிக்கும் ராஜூ (49) என்பவரின் வீட்டிற்கு விளையாட சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுமிக்கு ராஜூ பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராஜூவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜூ, நடிகர் வடிவேலு நடித்த எலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணிபுரிந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜூவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:டான்சர் ரமேஷ் மாயம் - போலீசில் மனைவி புகார்

ABOUT THE AUTHOR

...view details