சென்னை:சாலை விதிகளை மீறுதல், கடத்தல் விவகாரம் ஆகிய சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட வானகங்கள், விபத்துகளில் சிக்கிய வாகனங்கள் அனைத்தும் காவல் நிலைய வளாகங்களில் நீண்ட காலமாக நிற்பது வழக்கம். இதனால், காவல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, சுகாதாரமற்ற சூழ்நிலையும் உருவாகிறது.
டிஜிபி உத்தரவு
இந்நிலையில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும், ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபடவும் அறிவுறுத்தி அனைத்து மாவட்டக் காவல் துறை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
வாகனங்கள் ஒப்படைப்பு