தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'முகக் கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு' - விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செயலர் சண்முகம்
தலைமைச் செயலர் சண்முகம்

By

Published : Nov 28, 2020, 9:24 PM IST

Updated : Nov 28, 2020, 10:02 PM IST

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் இன்று (நவம்பர் 28) ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, தலைமைச் செயலர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

* அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறையக்கூடாது, அனைத்து மாவட்டங்களிலும் இறப்பு விழுக்காடு குறைக்கப்பட வேண்டும், சிறந்த சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக கொண்டுவர, மாவட்ட ஆட்சியர்கள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

* பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும்.

* தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

* திருமண நிகழ்ச்சிகள், வணிக வளாகங்கள், பொது இடங்கள், சந்தை உள்ளிட்ட இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.

* கரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அபராதம் வசூலிக்க வேண்டும். அந்த கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 28, 2020, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details