இது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
'விவசாய மின் இணைப்பு தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கும் மாற்ற அனுமதிக்கப்படும். மின் இணைப்பை இடமாற்றம் செய்யும் செலவை மனுதாரர் ஏற்க வேண்டும். மின் இணைப்பு கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து அல்லது முந்தைய மின் இணைப்பு மாற்றப்பட்டதில் இருந்து ஒரு வருடம் கழித்துதான் மாற்றப்பட வேண்டும். மின் இணைப்பை மாற்றுவதற்கான கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆவணத்தில் பதிவு செய்து விண்ணப்பத்திற்கான கடிதம் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒருவருக்கு மட்டும் சொந்தமான மின் இணைப்பு அவரின் பெயரில் அல்லது கூட்டாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்துகொள்ளலாம். இதற்காக கூட்டாளிகள் இருப்பின் அவர்களின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
மின் இணைப்பு உள்ள இடத்தில் தற்சமயம் கிணறு இல்லை என்றாலும் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து கொள்ளலாம். மின் இணைப்பு, கிணற்றை வைத்துக்கொண்டு இடத்தை வேறு ஒருவருக்கு விற்றிருந்தாலும் மின் இணைப்பை இடமாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். மின் இணைப்பு இடமாற்றம் செய்யப்படும் சமயத்திலும், பின்னர் மின் இணைப்பு கொடுக்கப்படும் வரையில் சம்மந்தப்பட்ட நபர் பெயரிலேயே மின் இணைப்பு இருக்க வேண்டும்.
விவசாய மின் இணைப்பில் சேஞ் இவர் ஸ்விட்ச் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன் சம்மந்தப்பட்ட மின் அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. சேஞ்ச் ஓவர் தொடர்பாக அனுமதி கோரும் கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் மின் இணைப்பில் சேஞ்ச் ஓவர் சீல் செய்ய அலுவலர் நேரில் பார்வையிட வேண்டும். டெஸ்ட் ரிப்போர்ட் நகல் ஒன்றை மனுதாரருக்கு அலுவலர் அதே இடத்தில் வழங்க வேண்டும். மின்சார பளு ஹெச்.பி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இயக்கக்கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.