தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் வினோத் குமார்(26). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வந்ததால், புதியதாக 18,000 ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் வாங்கி அதில் வேலைக்கு சென்று வருகின்றார்.
இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் சைக்கிளை வீட்டில் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.