சென்னை மடுவங்கரை பகுதியைச்சேர்ந்தவர் சுரேஷ் (37). கஞ்சா போதைக்கு அடிமையான சுரேஷுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கஞ்சா அடிக்கும் இடத்தில் வைத்து வேளச்சேரியைச் சேர்ந்த பிரியாணி, நொட்டு விக்கி (எ) தமிழரசன் (27) ஆகிய இருவர் பழக்கமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கஞ்சா போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரியாணி என்பவரை சுரேஷ் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரியாணி தனது நண்பனும் சுற்றுவட்டாரத்தில் ரவுடியாக வலம் வந்த நொட்டு விக்கியிடம் தன்னை சுரேஷ் தாக்கியதைக் கூறி தட்டிக்கேட்குமாறு முறையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பிரியாணியின், இருசக்கர வாகனத்தில் நொட்டு விக்கி மடுவாங்கரைக்குச்சென்று சுரேஷை அவரது வீட்டிலிருந்து, அதே இருசக்கர வாகனத்தில் நடுவில் அமரவைத்து அழைத்து வந்தனர்.
பின்னர் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்து வந்த நொட்டு விக்கி தான் மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியால் நடுவில் அமர்ந்திருந்த சுரேஷை சரமாரியாகத் தாக்கினார். இந்த திடீர் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக சுரேஷ் உயிர்தப்பித்து ஓடி பின் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.