இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலின் அடிப்படையில், "திருப்பூரில் தனியார் ஆய்வகம் ஒன்றில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 60 ஆயிரத்து 365 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 457 பேர், பிகாரில் இருந்து வந்த நான்கு பேர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒருவர் என 1464 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 1464 பேருக்கு கரோனா தொற்று உறுதி - minister vijayabaskar
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 26) புதிதாக 1464 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 15 லட்சத்து 13 ஆயிரத்து 892 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், தனிமைப்படுத்தும் மையங்கள், மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 173 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த ஆயிரத்து 797 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 332ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 6 பேர், அரசு மருத்துவமனையில் 8 பேர் என இன்று 14 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 669ஆக உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 2,13,801
கோயம்புத்தூர் - 48,133
செங்கல்பட்டு - 47,231
திருவள்ளூர் - 40668
சேலம் - 29572
காஞ்சிபுரம் - 27,462
கடலூர் - 24,124
மதுரை - 19615
வேலூர் - 19201
திருவண்ணாமலை - 18559
தேனி - 16557
தஞ்சாவூர் - 16295
விருதுநகர் - 15841
தூத்துக்குடி - 15622
கன்னியாகுமரி - 15,612
ராணிப்பேட்டை - 15556
திருநெல்வேலி - 14765
விழுப்புரம் - 14543
திருப்பூர் - 15115
திருச்சிராப்பள்ளி - 13324
ஈரோடு - 12202
புதுக்கோட்டை - 11078
கள்ளக்குறிச்சி - 10632
திண்டுக்கல் - 10201
திருவாரூர் - 10387
நாமக்கல் - 10283
தென்காசி - 8033
நாகப்பட்டினம் - 7537
திருப்பத்தூர் - 7188
நீலகிரி - 7339
கிருஷ்ணகிரி - 7332
ராமநாதபுரம் - 6188
சிவகங்கை - 6268
தருமபுரி - 6018
அரியலூர் - 4544
கரூர் - 4760
பெரம்பலூர் - 2235
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 926
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 999
ரயில் மூலம் வந்தவர்கள் - 428