சென்னையிலிருந்து ராஞ்சிக்குச் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம்செய்ய வந்தவர்களில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த உமேஷ்குமாா் சா்மாவும் (45) ஒருவர். இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கு சிகிச்சைப் பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து, வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றாா். சிகிச்சை முடிந்து சொந்த ஊா் திரும்ப இன்று (டிச. 03) அதிகாலை மனைவியுடன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு விமானத்தில் பயணிக்க பாதுகாப்புச் சோதனைக்காக வரிசையில் நின்றவா் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக விமான நிலைய மருத்துவா்கள் விரைந்துவந்து பரிசோதித்துவிட்டு, கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனா்.
இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு! - விமான நிலையத்தில் நெஞ்சுவலியால் ஒருவர் உயிரிழப்பு
சென்னை: சென்னையிலிருந்து ராஞ்சி செல்ல காத்திருந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக விமான நிலையத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
chennai