சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் இன்று (ஆக.27) அதிகாலை 3:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் 3 வாகனங்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதனிடையே அந்த வார்ட்டின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் வேறு வார்டிற்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை. மருத்துவ உபகரணங்கள் மட்டும் தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பாக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.