தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி ஆலோசனை

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து இணையதள ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடந்து வருகிறது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி ஆலோசனை
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி ஆலோசனை

By

Published : Aug 20, 2022, 3:02 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா, ஜர்தா, மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதனை தடுக்க மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக ’போதைப் பொருள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை எட்ட காவல் துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுடன் இணையதள ஆலோசனை கூட்டம் தற்போது டி.ஜி.பி அலுவலகத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்று வருகிறது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி ஆலோசனை

இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அனைத்து காவல் அதிகாரிகளுடன் இணையதள ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் நடந்து வருகிறது. இதில் சென்னை காவல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், தாம்பரம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை இயக்குநர், அனைத்து சரக ஐ.ஜி க்கள், டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவதுடன், எந்த வகையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுவருதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் முறுக்கு... ஆவினில் 10 புதிய பால் பொருட்கள்... அறிமுகம் செய்தார் அமைச்சர் நாசர்

ABOUT THE AUTHOR

...view details