சென்னை சாலிகிராமம் தசரதபுரம் 8ஆவது தெருவில் குடிபோதையில் ஒருவர் பொதுமக்களிடம் தகராறு செய்வதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பழனி, முதல்நிலை காவலர் ஓட்டுனர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
குடிபோதையில் போலீஸை அறைந்த நடிகையின் சகோதரர் மீது வழக்குப்பதிவு - திரைப்பட நடிகை பாபிலோனாவின் சகோதரர் மீது வழக்குப்பதிவு
சென்னை: குடிபோதையில் காவலரின் கன்னத்தில் அறைந்த நடிகையின் சகோதரர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது குடிபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்த நபர் சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்பதும், மேலும் திரைப்பட நடிகை பாபிலோனாவின் சகோதரர் என்பதும் தெரியவந்தது. பின்னர் விக்கியிடம் காவலர் சங்கர் விசாரித்து கொண்டிருந்தபோது திடீரென்று காவலரின் கன்னத்தில் விக்கி அறைந்துள்ளார்.
அளவுக்கு அதிகமான போதையில் விக்கி இருந்ததால் அவரை கைது செய்யாமல் காவலர் வந்துள்ளார். இதையடுத்து காவலரை தாக்கிய விக்கி மீது விரும்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.