தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - chennai district

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM

By

Published : Nov 5, 2021, 9:29 PM IST

1.குறையும் சமையல் எண்ணெய் விலை - உணவுத்துறை அமைச்சகம் தகவல்

நாட்டின் முக்கிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களான அதானி வில்மர், ருச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆகியன சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 4 முதல் 7 ரூபாய் வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2.குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்.பி.,க்கு அடி, உதை!

கடந்த 2014-19 ஆண்டுகாலத்தில் நீலகிரி(தனி) தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன் குடிபோதையில், மற்றவரின் வீட்டில் புகுந்து அடி, உதை வாங்கிய சம்பவம் அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

3.திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவரா? - தொல்.திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர் என நூலாசிரியர் தெய்வநாயகம் பேசிய கருத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

4.ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி 'ஜெய் பீம்' - சீமான் புகழாரம்!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்தைப் பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டுள்ளார்.

5.யாத்தே...'அண்ணாத்த' முதல்நாள் வசூல் இவ்வளவா..?

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் முதல்நாளில் தமிழ்நாட்டில் ரூ.34.92 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6.காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ. 5 கோடி மோசடி - அதிமுக ஊராட்சி மன்றத்தலைவருக்கு வலைவீச்சு!

காவல் துறையில் பல்வேறு பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த சுமார் 100 பேரிடம் ரூபாய் 5 கோடி மோசடி செய்த இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் முக்கியக் குற்றவாளியான அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

7.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், குடும்ப நல நீதிமன்றம் துணை நிற்காது!

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8.நீட் தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி: லேப்டாப் வழங்கி அமைச்சர் பாராட்டு

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிக்கு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மடிக்கணினி வழங்கிப் பாராட்டினார்.

9.நண்பகல்வரை 138 மெட்ரிக் டன் தீபாவளி பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் 138 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

10.மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு கரோனா அறிகுறி

பாராமதியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அஜித் பவாருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் கலந்து கொள்ளவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கமளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details