தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்: ஒன்பது பேர் கைது - சென்னையில் சூதாட்டம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சூதாட்டம்
சூதாட்டம்

By

Published : Sep 15, 2020, 10:53 PM IST

சென்னை தி. நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தேனாம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தி. நகர் விஜயராகவா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக்கரணையை சேர்ந்த மல்லேஸ்வர ராவ்(42), செல்வக்குமார்(53), பாலமுருகன்(39), ஐயப்பன், ஸ்ரீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 12 சீட்டுக்கட்டுகள் மற்றும் 74,450 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details