தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கும்மிடிப்பூண்டியில் குத்தாட்டம் போட்ட மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்! - பொன்னேரி தனியார் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் மேல தாளத்துடன் ஆட்டம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பேண்டு வாத்தியங்களுடன் குத்தாட்டம் போட்ட 7 அரசு கல்லூரி மாணவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

கைது
கைது

By

Published : Jun 12, 2022, 3:49 PM IST

திருவள்ளூர்:பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் மேள, தாளம் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்கச்சென்ற ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுடன் அங்கிருந்த மாணவர்களில் சிலர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஜூன்11) காலை கல்லூரி மாணவர்கள் சிலர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி நடைமேடையில் பட்டாசுகள் வெடித்தும் மேளதாளங்களுடம் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். இதனால், அங்கு ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படவே, இது தொடர்பாக அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ராஜேஷ்குமார் என்பவர் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளார். அப்போது, கலைந்து செல்ல மறுத்த கல்லூரி மாணவர்கள் அவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபட்டோதோடு, அம்மாணவர்கள் பின் அவ்வழியாக வந்த கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி வரை செல்லும் ரயிலில் ஏறி தப்பிச்சென்றனர். இதனையடுத்து பொன்னேரியில் ரயில் நிற்கும் என்பதால் வாகனத்தில் பின் தொடர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், பொன்னேரி ரயில் நிலையத்திற்கு சென்றபோது அங்கே 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பட்டாசு வெடித்தும் மேளதாளங்களுடன் ஆட்டம் போட்டுள்ளனர். தனியார் கல்லூரி ஒன்றின் பெயர் பொருந்திய பேனரையும் ரயிலில் கட்டி ரயில் பயணிகளுக்கும், ரயில் நடைமேடையில் இருந்தவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.

ரயில்வே சட்டத்தின் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
இதனையடுத்து பிரச்னைக்கு காரணமான முக்கியமான 7 கல்லூரி மாணவர்களைப் பிடித்த பாதுகாப்புப் படை வீரர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. சக கல்லூரி மாணவருக்கு பிறந்தநாள் என்பதாலும்; கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி வரை ரயில் ரூட் மூலமாக சென்று ரூட் கொண்டாடியது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே சட்டத்தின் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 மாணவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள் சிறையில் அடைத்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details