தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனமழையைச் சமாளிக்க 684 நீர் இறைக்கும் பம்புகள் தயார் - சென்னை மாநகராட்சி - நீர் இறைக்கும் பம்புகள்

மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 684 நீர் இறைக்கும் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆய்வு
சென்னை மாநகராட்சி ஆய்வு

By

Published : Nov 18, 2021, 11:27 AM IST

சென்னை: நவம்பர் 17, 18 ஆகிய இரண்டு நாள்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 684 நீர் இறைக்கும் பம்புகள் (water pumps) பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடந்த திடக்கழிவுகள், வண்டல்கள், நெகிழிப் பொருள்களை அகற்ற மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணி கடந்த 12ஆம் தேதிமுதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

நீர் இறைக்கும் பம்புகள்
இந்தத் தீவிர தூய்மைப் பணியின் மூலம் சென்னை மாநகரில் நாள்தோறும் சுமார் 5700 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு கையாளப்பட்டுவருகின்றன. மேலும், மழையின் காரணமாக வண்டல்கள் சாலையின் வண்டல் வடிகட்டித் தொட்டிகள், மழைநீர் வடிகாலில் சென்று ஒரு சில இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கிய இடங்களில் உள்ள மழைநீர் வடிகால், வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அதிகக் கவனம் செலுத்தப்பட்டு, இனி பெய்யும் மழைக்கு முன்பே தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த வார மழையின்போது மழைநீர் தேங்கிய இடங்கள், தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சியின் 448 மோட்டார் பம்புகள், வாடகைக்கு பெறப்பட்ட 199 மோட்டார் பம்புகள், பிற துறைகளிலிருந்து பெறப்பட்ட 37 மோட்டார் பம்புகள் என மொத்தம் 684 நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் 100-க்கும் அதிகமான ஹெச்.பி. திறன்கொண்ட 22 மோட்டார் பம்புகள், 50-க்கும் அதிகமான ஹெச்.பி. திறன்கொண்ட 28 மோட்டார் பம்புகள் அடங்கும். மேலும், தாழ்வான பகுதிகள், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் வளர்ச்சித் துறையுடன் இணைந்து படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details