தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் நிபந்தனையுடன் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு - ராமநாதபுரம் செய்திகள்

இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்கள் 55 பேருக்கு இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை அளித்து உத்தரவிட்டுள்ளது.

55 Tamil Nadu fishermen released from Sri Lankan jails
55 Tamil Nadu fishermen released from Sri Lankan jails

By

Published : Jan 25, 2022, 8:51 PM IST

Updated : Jan 25, 2022, 9:09 PM IST

கொழும்பு (இலங்கை): ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த டிச.18 மற்றும் 20ஆம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களின் வழக்கு இன்று இலங்கையின் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததால், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய 8 மீன்பிடி விசைப்படகுகள் குறித்த விசாரணை வருகிற ஏப்.1ஆம் தேதி வழக்கு வர உள்ளது.

அப்போது படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் நிபந்தனையுடன் விடுதலை

கரோனா பாதிப்பு

இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 55 பேரும் கொழும்பில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு சிறுவன் மற்றும் கடந்த 5ஆம் தேதி விடுவிக்கப்பட்ட மீனவர்களில் மூன்று பேர் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் உட்பட 59 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைய்ம் படிங்க: பிற இந்திய மொழிகளையும் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் கற்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

Last Updated : Jan 25, 2022, 9:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details