சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள் இயங்கி வருகிறது.
இதில் 11 மாதங்கள் தற்காலிகமாக நகர்ப்புற சுகாதார மையத்தில் பணி புரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
51 பணியிடங்கள்
10 மகப்பேறு நிபுணர்கள், 12 குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள், 14 பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள், 15 பொது மருத்துவர்கள் என 51 காலி இடங்கள் உள்ளன. இந்த 51 பணியிடங்களுக்கும் மாதம் ரூ. 90,000 ஆயிரம் ஊதியம் என மாநகராட்சி நிர்ணயித்துள்ளது.
தகுதி உடையவர்கள் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து ஜூலை 22ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ஜூலை 27ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஆவின் விஜிலென்ஸ் பிரிவுக்கு துணை ஆணையர் ஜெயலட்சுமி நியமனம்'