தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

50 கோடி செலவில் வேளாண் வணிக வளாகம்! - வேளாண் வணிக வளாகம்

சென்னை: வேளாண் துறை சார்பில் ஐந்து மாவட்டங்களில் வேளாண் வணிக வளாகம் 50 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

50 கோடி செலவில் வேளாண் வணிக வளாகம்!
50 கோடி செலவில் வேளாண் வணிக வளாகம்!

By

Published : Feb 24, 2020, 5:59 PM IST

2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள் திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஐந்து இடங்களில் முன்னோடித் திட்ட அடிப்படையில் மொத்தம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு – வேளாண் சந்தை உள்கட்டமைப்பு நிதியின்கீழ் நிறுவப்படும்.

இந்த வளாகங்கள் இடுபொருள் விற்பனையகங்கள், சேவை மையங்கள், பிற விற்பனை நிலையங்கள் போன்ற வசதிகளுடன், விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினரும் பயன்பெறும் வகையில், பொதுவான தளங்களாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமையவுள்ள இந்த வணிக வளாகங்கள் விவசாயிகளின் தேவை, அங்கு விளையக்கூடிய பொருள்களைச் சந்தைப்படுத்தும்வகையில் அமைக்கப்பட உள்ளது. ஒரு மாவட்டத்தில் அமையவுள்ள வணிக வளாகம் ரூ.10 கோடி என்று 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் ஐந்து மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது.

இந்த வளாகங்கள் 25 - 50 டன் வரையான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு, விவசாயிகளுக்கு பயிற்சி நிலையம், வேளாண் வாகன பழுதுநீக்கும் நிலையம், கேன்டீன், ஏடிஎம், விவசாயிகளின் வேளாண் பொருள்கள் காட்சிப்படுத்தும் வசதி ஆகியவை கொண்டு இந்த வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...சும்மா பேச்சுக்கு ட்ரம்பை கலாய்த்த ஆர்ஜிவி

ABOUT THE AUTHOR

...view details