தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை-மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடுகள் உயிரிழப்பு - மின்சார வாரிய துறை

சென்னை: வயல் வெளியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஐந்து பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

5 cows died in electric shock in Chennai
5 cows died in electric shock in Chennai

By

Published : Jul 29, 2020, 6:58 PM IST

சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது திடீரென உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

இதில் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஐந்து பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. உயிரிழந்த பசு மாடுகள் குட்டியம்மாள் மோகன், வெங்கடேசன், ஏழுமலை ஆகியோருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது.

பசு மாடுகள் இறப்பிற்கு மின் வாரியம் தான் காரணம், உயர் மின்னழுத்த கம்பி மிகவும் தாழ்வாக இருப்பதாகவும், மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் ஏற்கனவே மின்வாரியத்திடன் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் மழையின் காரணமாக மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்தது என்கின்றனர் மாட்டின் உரிமையாளர்கள்.

இதனையடுத்து தக்க நடவடிகை எடுக்ககோரி மாட்டின் உரிமையாளரகள், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details