தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிந்தாதிரிப்பேட்டை ரவுடி கொலை - ஐவர் நீதிமன்றத்தில் சரண்! - 5 accused

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரணடைந்தனர்.

Rowdy murder case

By

Published : Sep 25, 2019, 9:32 AM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன்(38). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தமிழரசன் அங்குள்ள லாசர் தெரு சந்திப்பில் நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தமிழரசனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 21 ஆண்டுக்கு முன்பு நடந்த கொலையில் பழிக்குப் பழி வாங்கவே, தமிழரசன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பாம்பே சசி என்பவர் 21 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தமிழரசன் சம்பந்தப்பட்டு இருந்ததால், இது தொடர்பாகப் பாம்பே சசியின் உறவினர் இமானுடன் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த மோதலில் இமான், பாம்பே சசியின் மகன் நவீன், கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசனைத் தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இமான், விக்னேஷ், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அஜய், தாவூத், பல்லவன் நகரைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய ஐந்து பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

பின்னர் காவலர்கள் ஐந்துபேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். சரணடைந்த ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதன் பின்னரே கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் தொடர்புடையவர்கள் யார் யார்? என்பது குறித்து தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

யார் இந்த தாதா மணி... எவ்வாறு சுட்டுவீழ்த்தப்பட்டார்?

ABOUT THE AUTHOR

...view details