தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் 43 பேர் இடமாற்றம்! - கார்கோ

சென்னை விமான நிலையம், துறைமுகம், கார்கோவில் பணியாற்றி வந்த சுங்கத்துறை அதிகாரிகள் 43 பேர், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

customs
customs

By

Published : Jul 4, 2022, 9:37 PM IST

சென்னை: சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்குப்பிரிவான காா்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என்று பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பல பேர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால், தற்போது ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து, சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து சுங்கத்துறை முதன்மை ஆணையா் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மொத்தம் 43 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 30 பேர் உதவி ஆணையர்கள், 13 பேர் துணை ஆணையர்கள்.

இவர்கள் துறைமுகத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் கார்கோ பகுதிகளுக்கும், கார்கோவில் ஏற்றுமதி பிரிவில் பணியில் இருப்பவர்கள் இறக்குமதி பிரிவுக்கும் இறக்குமதி பிரிவில் ் இருப்பவர்கள் ஏற்றுமதி பகுதிக்கும், சிலர் விமான நிலைய கொரியர் அலுவலகம், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது வழக்கமாக நடக்கும் பொது இடமாற்றம்தான் என்றும், ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிா்ப்பதற்காக, நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details