மநீம அலுவலகத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக 4 தொகுதிகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மநீம பொதுச்செயலாளர் குமரவேல், "ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இந்த இளைஞர்களுடன் சேர்ந்து இத்தேர்தலில் பயணிப்பது மகிழ்ச்சி. முதல் கட்டமாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விரைவில் அடுத்தக்கட்ட பேச்சு மற்றும் தொகுதிப்பங்கீடு நடைபெறும்
எஸ்டிபிஐ கட்சியுடன் தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் அவர்கள் சென்றுவிட்டனர். ஐஜேகே மற்றும் சமகவுடன் எந்த முரண்பாடும் இல்லை. கமல் ஹாசன் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவார். கருணாஸ் ஐஜேகே உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கருணாஸ் போட்டியிட வாய்ப்புள்ளது” என்றார்.
தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக 4 தொகுதிகள்! மநீம ஒதுக்கீடு! தொடர்ந்து பேசிய தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பிரதீப், "நல்லவர்கள் எல்லாம் ஒன்று கூட வேண்டும் என்ற கமலின் அழைப்பை ஏற்று அவரோடு கூட்டணி வைத்துள்ளோம். 10 தொகுதிகள் கேட்டுள்ளோம். முதல் கட்டமாக 4 தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். இளைஞர்கள் இத்தேர்தலில் நிச்சயமாக மாற்றத்தை நோக்கி வாக்களிப்பார்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:மநீம கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள்!