சிங்கப்பூர், உக்ரைன், இலங்கை ஆகிய நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களில் 351 பேர் மீட்கப்பட்டு மூன்று சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைன் நாட்டிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் 150 பேரும், சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு(ஜூலை 25) 117 பேரும், இலங்கையிலிருந்து இன்று காலை 24 பேரும் சென்னை வந்தடைந்தனர்.
சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்த 351 இந்தியர்கள்! - Chennai district
சென்னை: சிங்கப்பூர், உக்ரைன், இலங்கை ஆகிய நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களில் 351 பேர் இன்று சென்னை வந்தடைந்தனர்.
351 people came to Chennai by special flights from three countries
இவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள், குடியுரிமை உள்ளிட்ட சுங்க சோதனைகள் நடைபெற்றது. இவர்களில் சிலர் அரசின் இலவச தனிமைப்படுத்தல் மையங்களுக்கும், இன்னும் சிலர் கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தல் மையங்களும் சென்றனர்.