சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் இன்று ஏப்.10ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 20 ஆயிரத்து 53 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனையில், தமிழ்நாட்டில் மேலும் 30 நபர்களுக்கு, புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரத்து 972 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனால், தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 84 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில், தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைபடுத்தும் மையங்களில் 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த 31 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 831 என உயர்ந்துள்ளது.