தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கமல்ஹாசன் படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு - Kamal Haasan shooting accident

சென்னை: கமல்ஹாசன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து கமல்ஹாசன் படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் பலி சென்னை பூந்தமல்லி, கமல்ஹாசன், இந்தியன் 2 3 killed in Kamal Haasan shooting accident Kamal Haasan shooting accident Indian2
3 killed in Kamal Haasan shooting accident

By

Published : Feb 19, 2020, 10:54 PM IST

Updated : Feb 19, 2020, 11:35 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் நடந்துவருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 10 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களில் நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவ உதவிகளை கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன்2 படப்பிடிப்பில் ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்து

படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். படத்தின் முக்கியக் காட்சி மிகப்பெரிய கேமராவில் பதிவாகிக் கொண்டிருந்தபோது கிரேன் அறுந்துவிழுந்ததாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

இயக்குநர் ஷங்கர் படங்கள் மிக பிரமாண்டமாக இருக்கும். அந்த வகையில் இந்தியன் 2 படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிவருகிறது.

Last Updated : Feb 19, 2020, 11:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details