சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் இன்று (ஏப்.28) கஸ்தூரிரங்கன் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப்பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது, சிறிய பாக்கெட்டுகளில் 200 கிராம் கஞ்சாவை வைத்து இருந்தது தெரியவந்தது.
கஞ்சா வைத்திருத்த கல்லூரி மாணவர்கள்: இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது உசேன்(20), ஜெயேந்திரர் ராஜி(21) இருவரும் தனியார் கல்லூரியில் மூண்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கஞ்சா வழக்கில் கைது; 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் - கஞ்சா வியாபாரி உட்பட கல்லூரி மாணவர்கள் மூவரைக் கைது செய்த போலீசார் 10 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னையில் கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் கஞ்சா எப்படி கிடைத்தது என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் பக்கத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.
இதை அடுத்து, போலீசார் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரும் மீண்டும் தங்களுக்கு கஞ்சா வேண்டும் எனவும் கஞ்சா விற்கும் நபரைத் தொடர்பு கொண்டு வந்து தருமாறும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய வரும்போது, அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரின் பின்னணியில் சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஹரி(33) என்பவர் உள்ளது தெரியவந்தது.
3 பேருக்கு சிறை: மேலும் ஹரி, ஜாம்பஜார் அபிபுல்லா சாலையில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா வைத்து விற்பனை செய்வது வந்ததும் தெரியவந்துள்ளது. ஆந்திராவிற்கு சென்று ரயில் மூலம் கஞ்சாவைக் கடத்தி வந்து செல்போனில் எண்களைத் தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 10.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கை கழுவச் செல்வதாக கம்பி நீட்டியவரை கைது செய்த காவல்துறை!