இது குறித்து உயர்கல்வித்துறை "தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மூன்று லட்சத்து 12 ஆயிரத்து 883 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் இரண்டு லட்சத்து 25 ஆயிரத்து 819 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக ஜூலை 20ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 6 மணி (ஜூலை 31) வரை பெறப்பட்டன.
விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.
எனவே மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:யோகா, இயற்கை மருத்துவப் படிப்பிற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!