இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில்,
"தமிழ்நாட்டில் புதிதாக 2 ஆய்வகங்களுக்கு இன்று பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 83 ஆய்வகங்களில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று 25 ஆயிரத்து 902 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 2115 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 2075 நபர்களும், வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 40 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 408 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 54 ஆயிரத்து 449 நபர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில், தற்போது 23 ஆயிரத்து 509 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பூரண குணமடைந்த 1630 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 30 ஆயிரத்து 271 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று மற்றும் பிற நோய்களுடன் சிகிச்சைப் பெற்றவர்களில் பலனின்றி 41 பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 666ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் இன்று ஆயிரத்து 322 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 38 ஆயிரத்து 327 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 669 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் பின்வருமாறு:
- சென்னை - 38,327
- செங்கல்பட்டு - 3,432
- திருவள்ளூர் - 2,291
- காஞ்சிபுரம் - 1001
- திருவண்ணாமலை - 853
- கடலூர் - 647
- திருநெல்வேலி - 584
- தூத்துக்குடி - 529
- விழுப்புரம் - 528
- மதுரை - 550
- ராணிப்பேட்டை - 409
- அரியலூர் - 407
- கள்ளக்குறிச்சி - 364
- சேலம் - 280
- திண்டுக்கல் - 272
- வேலூர் - 354
- ராமநாதபுரம் - 245
- கோயம்புத்தூர் - 244
- தஞ்சாவூர் - 213
- தென்காசி - 210
- திருச்சிராப்பள்ளி - 207
- நாகப்பட்டினம் - 191
- விருதுநகர் - 179
- திருவாரூர் - 186
- தேனி - 185
- கன்னியாகுமரி - 151
- பெரம்பலூர் - 147
- திருப்பூர் - 119
- கரூர் - 109
- நாமக்கல் - 92
- ஈரோடு - 79
- சிவகங்கை - 80
- புதுக்கோட்டை - 62
- திருப்பத்தூர் - 55
- கிருஷ்ணகிரி - 57
- நீலகிரி - 30
- தருமபுரி - 28
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 242
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 129
- ரயில் மூலம் வந்தவர்கள் - 381