வங்கிகளுக்கு அக்டோபர் மாதம் பொது விடுமுறையாக 21 நாள்களாக ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி விடுமுறை தேதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு 21 நாள்கள் விடுமுறை உண்மைதானா? - 21 days leave for bank
அக்டோபர் மாதத்தில் 21 நாள்களில் வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு 21 நாள்கள் விடுமுறை உண்மைதானா?
அதன்படி, அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் அகேடோபர் 19ஆம் தேதி மிலாடி நபி என்பதால் இந்தத் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், வழக்கம்போல் வங்கிகளின் வார விடுமுறை தேதிகளான அக்டோபர் 3, 9, 10, 17, 23, 24, 31 ஆகிய தேதிகளிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளன.