சென்னை: பாலவாக்கத்தை சேர்ந்த சாது(26), நந்தினி(23) தம்பதிக்கு தட்சன் என்ற இரண்டு வயது குழந்தை இருந்தது.
நேற்றிரவு (அக்டோபர் 14) பனையூர் ஈசிஆர் சாலையில் குழந்தையுடன் கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த இரண்டு இருச்சக்கர வாகனங்கள் சாதுவின் வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி குழந்தை உள்பட அனைவரும் கீழே விழுந்தனர். இதில் சாதுவுக்கும், அவரது மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 வயது குழந்தைக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.