தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 2, 2022, 7:49 PM IST

ETV Bharat / city

தடகள வீராங்கனைக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை - அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு ரூபாய் 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தடகள வீராங்கனைக்கு 2 லட்சம் ஊக்கத்தொகை- அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்
தடகள வீராங்கனைக்கு 2 லட்சம் ஊக்கத்தொகை- அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

சென்னை:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியுள்ளதாவது,'கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு பகுதியைச் சார்ந்தவர் சமீஹா பர்வீன். இவர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான காதுகேளாதோருக்கான தடகளப்போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அகில இந்திய காது கேளாதோருக்கான விளையாட்டு கவுன்சில் சார்பில் நடைபெற்ற 7ஆவது காது கேளாதோருக்கான ஜூனியர் - சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்றவற்றில் முதலிடம் பெற்றார்.

மேலும் போலந்து நாட்டில் 2021, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம்தாண்டுதலில் 7ஆவது இடமும் பெற்றார். அரசு சார்பில் உயரிய பயிற்சி மேற்கொள்ளவும், மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தேவையான உதவிகள் செய்திடவும், ஊக்கத்தொகை வழங்கிடவும் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, இவரது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், "வெற்றியாளர் உருவாக்கும் திட்டத்தில்" சேர்த்து பெருமைப்படுத்தியுள்ளது. மேலும் சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும், மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பயணகட்டணம் போன்றவைகளுக்காகவும் ஊக்கத்தொகையாக ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் போலந்து நாட்டில் நடைபெற்ற உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தடகள வீரர்கள் செல்வி. சமீஹா பர்வீன் (நீளம் தாண்டுதல்-long jump), கே. மணிகண்டன்(நீளம் தாண்டுதல்-long jump 100m) மற்றும் ஆர்.சுதன் (மும்முனை தாண்டுதல்- triple jump)ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 30-ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது' என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:2022-23ஆம் நிதியாண்டில் ரூ.1500 கோடி வரி வசூலிக்க இலக்கு - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details