சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில நாள்களாகப் பெய்துவந்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. அதன் காரணமாக இன்று (டிச. 06) காலை தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆறுமுகம் (48), மோகன் (68) ஆகிய இருவரும் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு - 2 electrocuted in chennai
சென்னை: வியாசர்பாடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
2-electrocuted
அப்போது மின் மோட்டாரைப் போடும்போது, அதிலிருந்து திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனால் அவர்கள் இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். அதையடுத்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்கள் மீட்கப்பட்டன. தற்போது அவர்களின் உடல்கள் கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு