சென்னை ராணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. இவரது வீட்டின் பின்புறம் ஆறு தொழிலாளர்கள் போர்போடும் பணியில் ஈடுபட்டனர்.
200அடி ஆழத்தில் போர்போட்டுக் கொண்டிருந்த போது, போர்வெல் வாகனம் சரியும் நிலையில் இருந்தது. இதை கவனித்த தொழிலாளர் சிவா என்பவர், கடப்பாறையை கொண்டு முட்டுக் கொடுத்துள்ளார்.
அப்போது பூமி அடிக்குச் சென்ற கேபிள் மீது கடப்பாறை குத்தியதில், தவறுதலாக மின்சாரம் வாகனம் அருகில் நின்றிருந்த சிவா, பாண்டி ஆகியோர் மீது பாய்ந்தது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மற்றொரு தொழிலாளரான முனியாண்டி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
போர் போடும் பணியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்!