தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச்சுருக்கம் - Top 10 news @ 1PM - top 10 news@1pm

1 மணி செய்திச்சுருக்கம் - Top 10 news @ 1PM

1 மணி செய்திச்சுருக்கம்
1 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 3, 2021, 1:25 PM IST

1.மனைவியை பிரிகிறார் அமிர் கான்!

நடிகர் அமிர் கானும் அவரது மனைவி கிரண் ராவும் இல்லற வாழ்வில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

2.தமிழ் பேசும் பஞ்சாப் சிங்கம்! தாலாட்டு தின வாழ்த்துகள் பாஜி!

இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்!

3.மதுரை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

மதுரை உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4.நீட் தேர்வு குறித்து ஆராய குழு - தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது - கே.எஸ்.அழகிரி

நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமையில்லை என அதிகார மமதையில் பாஜக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

5.மார்கண்டேய நதியின் குறுக்கே அணை - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டியுள்ளது தொடர்பான விவகாரத்திற்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
6.அம்மா உணவகத்தில் சத்துணவு வழங்கும் திட்டம்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு தினமும் சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7.ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடா? மீண்டும் விசாரணை

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை பிரான்ஸ் நீதிபதி மீண்டும் விசாரிக்கவுள்ளார்.

8.ஒன்றியம் என்பதில் என்ன பிழை? - ட்விட்டரில் கேள்வி எழுப்பிய வைரமுத்து!

மத்திய அரசை ஒன்றிய அரசு என பயன்படுத்துவதில் என்ன பிழை உள்ளது என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

9.3 கோடி ரூபாய் தங்கம், 7 கோடி சொத்து- பாண்டியன் வீட்டில் மீண்டும் ரெய்டு!

சுற்றுச்சூழல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

10.கேரள பாஜக மீதான ஹவாலா வழக்கு: மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனுக்கு நோட்டீஸ்!

கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ஹவாலா வழக்கு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details