நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. 100 சதவீதம் வாக்கு பதிவை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக வாக்காளர் சேர்க்கை, நீக்கல் திருத்தங்கள் செய்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டன.மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்டம் தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த உதவி மையத்தை '1950' என்னும் இலவச உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாக்காளர்கள் சென்று தாங்கள் வசிக்கும்பகுதியை தெரிவித்து ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருந்தால் அதைகாண்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பெயர் இருந்தால் எந்த தொகுதியில் உள்ளது,வாக்குச்சாவடி மையத்தின் பெயர், பாகம் எண் என்று முழு விபரத்தையும்தெரிந்து கொள்ள முடியும்.