தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காதலி தற்கொலை... சந்தேகத்தில் காதலன் கைது!

சென்னை: குன்றத்தூர் அருகே காதலன் தாக்கியதால், மனமுடைந்த காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதில் காதலனை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலன் கைது

By

Published : Jul 10, 2019, 11:23 PM IST

சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் தர்மராஜா தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன்(45). இவரது மகள் சீதா(18), குன்றத்தூர் சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(19), என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த இரண்டு மாதங்களாக காதலன் வீட்டிலேயே சீதா இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென இன்று சீதா தூக்குப்போட்டு கொண்டு உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த காவல்தறையினர் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து கீதா காதலன் ஹரிகிருஷ்ணனிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஹரிகிருஷ்ணன், சீதா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு சீதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோரை பிரிந்து சீதா, ஹரிகிருஷ்ணன் வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். குடிப்பழக்கம் உடைய ஹரிகிருஷ்ணன் வேலைக்கு ஏதும் செல்லாமல் அடிக்கடி கீதாவிடம் தகராறு செய்து கொடுமைபடுத்தி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சீதாவை ஹரிகிருஷ்ணன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மனம் உடைந்துபோன சீதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்ததையடுத்து ஹரிகிருஷ்ணன் மீது தற்கொலை தூண்டுதலின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details