தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் 1,623 பேர்! - சென்னை கரோனா

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக ஆயிரத்து 623 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

status
status

By

Published : Feb 20, 2021, 3:35 PM IST

மனித சமூகத்தை சுமார் ஒராண்டுக்கும் மேலாக இயல்பு நிலைக்கே திரும்ப விடாமல் பாடாய்படுத்தி வரும் கரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அவர்களின் அச்சங்களைப் போக்க பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் அரசு, தற்போது மக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையின் கரோனா ஹாட் ஸ்பாட்டாக இருந்த பல பகுதிகளில் கரோனா பரவல் குறைந்து காணப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரப் பட்டியலில்,

மண்டலம் - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை:

  • திருவொற்றியூர் - 55 நபர்கள்
  • மணலி - 56 நபர்கள்
  • மாதவரம் - 64 நபர்கள்
  • தண்டையார்பேட்டை - 70 நபர்கள்
  • ராயபுரம் - 79 நபர்கள்
  • திரு.வி.க நகர் - 115 நபர்கள்
  • அம்பத்தூர் - 150 நபர்கள்
  • அண்ணாநகர் - 157 நபர்கள்
  • தேனாம்பேட்டை - 146 நபர்கள்
  • கோடம்பாக்கம் - 158 நபர்கள்
  • வளசரவாக்கம் - 117 நபர்கள்
  • ஆலந்தூர் - 82 நபர்கள்
  • அடையாறு - 134 நபர்கள்
  • பெருங்குடி - 99 நபர்கள்
  • சோழிங்கநல்லூர் - 83 நபர்கள்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அம்மா மினி கிளினிக் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

ABOUT THE AUTHOR

...view details