தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

National Health Mission: சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்க திட்டம்

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் (National Health Mission) சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக 140 நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் (Urban Health and Wellness Centres) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Chennai Corporation, சென்னை மாநகராட்சி, National Health Mission, சென்னைக்கு 140 நகர்ப்புற சுகாதார மையம், 140 urban health centres for chennai
Chennai Corporation

By

Published : Nov 25, 2021, 7:28 AM IST

சென்னை: ஒன்றிய அரசு, சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு மாநிலங்களுக்கு புதிதாக மருத்துவமனை மற்றும் நகர்புற சுகாதார மையம் முதலியவை கட்டுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளது.

இதில், சென்னை மாநகராட்சிக்கு மொத்தம் 140 நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் (Urban Health and Wellness Centres) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தவிர, 40 பாலிகிளினிக், நான்கு பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றையும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் அமைக்க ஒன்றிய அரசால் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்னையில் மட்டும் 140 மையங்கள் அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இற்காக 88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அடுத்த எட்டு மாதங்கள் முதல் ஒரு வருட காலத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 744 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details