தமிழ் சமூகத்திற்கு பாரதியார் தனது கவிதைகள் மூலம் பெரும் தொண்டாற்றி இருக்கிறார். மகா கவி என போற்றப்படும் அவரை தமிழ் கூறும் நல்லுலகு இன்றுவரை போற்றி வருகிறது. மேலும், அவர் இயற்றிய கவிதைகள் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அறம் போதிக்கும் உரமாக இருக்கிறது.
இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்துடன் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு காலம் வெள்ளை நிறத்துடன் இருந்த பாரதியாரின் தலைப்பாகை தற்போது திடீரென காவி நிறத்திற்கு மாறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத் தலைவர் வளர்மதி, “மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகம் இது. கல்வியைப் பொறுத்தவரை மதத்திற்கோ, அரசியலுக்கோ இடமில்லை. இது தெரியாமல் நடந்திருக்கும். அப்படியாக இருந்தால் அது ஆராயப்பட்டு சரி செய்யப்படும்” என்றார்.